மூலிகை மருத்துவர்கள்
பகுதி -3
வேம்பு
மேலை நாட்டவர்களால் கவர நினைக்கப்பட்டு, பின் முறியடிக்கப்பட்ட நமது பாரம்பரிய சொத்து. அம்மனுக்கு அருள் வந்தாலும் , அருளுக்கு அம்மன் வந்தாலும் முதலில் தேட வேண்டியது வேப்பிலையை தான். சாதாரண வயிற்றுப் புழுவிலிருந்து , விஷ காய்ச்சலை உருவாக்கும் தட்டம்மை வரை , 'ஆன்ட்டிசெப்டிக் ' ஆகவும் பலன் தரும் . வேம்பிலுள்ள ' azadirrachtin' வேதி பொருள் மண்ணையும் உணவு பயிரையும் கூட காக்கும் உயிர் மருந்தாகும் .
நிலவேம்பு
இதை 'காய்ச்சலுக்கு கை மருந்து எனலாம் ' காய்ச்சலை உடனடியாக குறைக்கும் நிலவேம்பு, காய்ச்சலை தரும் காரணியை செயலிழக்க செய்யும் ஆற்றல் படைத்தது. உடல் வலியுடன் கூடிய ஜுரத்துக்கும் குளிர் உதறலுடன் கூடிய மலேரியா ஜுரத்துக்கும் நிலவேம்பு, ஒரு கைப்பிடி எடுத்து கஷாயமிட்டு 100மி .லி . அளவு இரு வேலை கொடுக்க ஜுரம் நீங்கும் .
கீழாநெல்லி
தமிழனை தரணியில் தலைநிமிர செய்த மூலிகை. ஹெபடைடிஸ் -பி எனும் கொடிய வைரஸ் நோயினால் பாதிப்புற்ற கல்லீரலை நோயிலிருந்து மீட்க , வைரஸ் செயல்திறனை அழிக்க , கீழாநெல்லிக்கு இணை கீழாநெல்லிதான் , மருத்துவ அறிவியல் கொடுத்த அங்கீகாரம் இது.
சீந்தில்
குடிசி வேர் என்றும் இதற்கு பெயர் உண்டு. தமிழகம் முழுவதும் பரவலாக வளரக்கூடிய இக் கொடி , பிற தாவரங்களில் படர்ந்து வளர்ந்திருக்கும். காய்ச்சல், நீர்க் கோர்வையுடன் கூடிய மூக்கடைப்பு , 'அலர்ஜி ' எனும் ஒவ்வாமை நிலையில் நோய் எதிர்ப்பாற்றலை சீர்படுத்த பணி சிறப்பு . ரத்த சர்க்கரை அளவை சீந்தில் கட்டுப்படுத்தும். சர்க்கரை நோய்யாளிகள் கவனிக்க ....
PLEASE ENTER YOUR VALUABLE COMMENT,
WITH YOUR REACTION ,..
Thanks for your visiting
good message..
ReplyDeleteThanks for valuable comment
Delete