சஹாரா
Sahara desert
சஹாராவில் உயிரினங்கள்
சஹாரா பாலைவனம் , மனிதர்கள் வாழ்வதற்கு கடினமான சூழ்நிலை கொண்ட இடமாகும் . ஆனால் , மனிதர்களும், விலங்குகளும் நீர் இருக்கும் சில இடங்களில் வாழ்ந்துவருகின்றனர் .
இந்திய ஒட்டகங்களும் , ஆடுகளுமே இப்பாலைவனத்தில் , அதிகம் காணப்படுகின்றன . சஹாரா பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாதாரணமான நில பகுதியாகவே இருந்தது , இப்பொது பல்வேறு பருவகால மாற்றங்களால் பாலைவனமாக மாறியுள்ளது , பல்வேறு நீர்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைத்துள்ளன .
பாலைவனத்தின் நிலப்பரப்பானது சற்று அதிகரித்து கொண்டும் குறைந்து கொண்டும் , அளவில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கும் . வரும் காலங்களில் பூமி முழுமையும் பாலைவனமாக மாறவும் சாத்திய கூறுகள் உள்ளன .
சஹாராவில் 20,00,000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர் . சஹாரா 75% மணற்பகுதியாகவும் மற்ற பகுதிகள் மலைகளும் , எரிமலைகளும் , நீர்நிலைகளும் உள்ளன .
சஹாராவில் பகல் நேரம் வெப்பம் 58டிகிரி செல்சியஸ் ஆகவும் , இரவில் குளிர் 6டிகிரி செல்சியஸ் முதல் 8டிகிரி செல்சியஸ் வரை இறக்கும். சஹாராவில் ஒரு ஆண்டுக்கு 1 செ . மீ மழை தான் பொழிகிறது எனவே சஹாரா ஒரு வறண்ட பாலைவனமாக காணப்படுகிறது .
சஹாராவின் கண்
சஹாராவின் கண் எனப்படுவது , பாலைவனத்தில் அமைந்துள்ள வட்ட வடிவ அமைப்பாகும் . இதனை பற்றிய தெளிவான விவரம் கிடைக்கவில்லை . முக்காலத்தில் வாழ்ந்த மக்களின் கட்டிட கலையாகவோ அல்லது பூமி உள்வாங்கி இருக்கலாம் என கருத்துக்கள் எழுந்துள்ளன .
Comments
Post a Comment