மூலிகை மருத்துவர்கள்
பகுதி -2
துளசி
துளசி மாடத்தை இறைவனின் இருப்பிடமாக கருதுவோர் பலர். காக்கும் கடவுளின் வடிவமான துளசி, உடலை நோயின்றி காக்கும் என்பது சித்தர் கூறும் உண்மை. சளியுடன் வரும் Influenza எனும் விஷ காய்ச்சலுக்கு துளசி சாறுடன் தேன் கலந்து சுரசம் செய்து கொடுக்க காய்ச்சல் தணியும். வைரஸை எதிர்க்கும் ஆற்றலும் செயலிழக்கும் திறனும் கொண்ட துளசி, மழை - குளிர் காலத்து அருமருந்து.
தூதுவளை
எப்போதும் இருமல் , சளியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு உணவிலும் மருந்திலும் தடுப்பாற்றல் கலந்து தர வேண்டும். தூதுவளை கீரையின் ரசம், தூதுவளை பழங்களை தேனில் ஊற வைத்து தருவது சளியை தடுக்கும். இதில் உள்ள 'Solunine' வேதிப்பொருள் சளியை வெளியே எடுப்பதாக கூறுகிறது மருத்துவ அறிவியல் .
நொச்சி
அடுக்கு தும்மல் , மூக்கடைப்பு , தலைவலி , கண் மற்றும் மூக்கு வீங்கி காணப்படுவோர் முதலில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா ? நொச்சி இலையை போட்டு ஆவி பிடியுங்கள். நொச்சி இலை கசாயத்தில் இருந்து வரும் ஆவி பிடிக்க , சைனஸ் பதிவுகளில் தங்கி, வலியும் அடைப்பும் தரும் நீர் வெளியேறி சுவாச புத்துணர்ச்சி கிடைக்கும். இந்த இலையில் உள்ள Aroma oil ஐ , எண்ணையில் வதக்கி வலியுள்ள மூட்டுகளில் ஒற்றடம் இடும் போது மூட்டு வலியை நீக்கவும் பயன்படுகிறது .
அரத்தை
Galangal root என்று அழைக்கப்படும் அரத்தையில் இரண்டு வகை , சிற்றரத்தை , பேரரத்தை என்பன அவை. அதில் சிற்றரத்தை சளி , இருமல் , நெஞ்சில் சளி கட்டி இருக்கும் கோழை இருமலுக்கு சிறந்த மருந்து. குழந்தைகளுக்கு இருமலுடன் தொடரும் வாந்தி தனிய சிற்றரத்தை ஒரு சிட்டிகை கொடுத்தால் போதும் . Galangin எனும் இதன் உட்பொருள் மூட்டுவலிக்கு சிறந்தது.
It is useful or not? publish your comment.
Useful for this good nature medicine 👍
ReplyDeleteThank you for this useful comment😍
Delete