மூலிகை மருத்துவர்கள்
பகுதி -1
காலம் காலமாக நோய்களைத் தீர்க்கும் மருத்துவ ஆற்றல் கொண்ட மூலிகைகள் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.
சுக்கு
தினமும் காலையில் காபித் தூளுக்கு பதிலாக சுக்குத் தூளும், மல்லித் தூளும் போட்டு, கருப்பட்டி கலந்து காபி சாப்பிட மூக்கடைப்பு , தலைவலி ,உடல் பித்தம் காணாமல் போகும். சுக்கை பயன்படுத்தும் போது மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.
மிளகு
"தோல் நோய் ", "நோய் எதிர்ப்பு தன்மை குறைவு " மற்றும் "நவீன மருத்துவத்தால் தீர்வின்றி தவிப்போர்க்கு மிளகு ஒரு அருமருந்து. நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட (Immuno Modulation) மிளகை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். ஆஸ்துமா, சைனி சைட்டீஸ், கரப்பான் எனும் எக்ஸிமா , திடீர் அரிப்பு மற்றும் தடிப்பை உருவாக்கும் 'அர்டிகேரியா ' நோய்க்கு மிளகும் , மிளகில் ஆனா மருத்துவம் உதவிக் கரம் நீட்டும் .
திப்பிலி
காலை எழுந்ததும் சளி கட்டி வரும் இருமலா, புகை பிடிப்பதால் ஏற்படும் இருமலா , குழந்தைகள் அவதிப்படும் இளம் காச நோயாக இருக்கட்டும் ( primary problem) திப்பிலி இருக்க பயமேன் , என்று கூறலாம். திப்பிலியை வெற்றிலை சாறில் பாவனம் செய்து (மூழ்கவைத்து பின் காயவைப்பது ) பின் பொடி செய்து வைத்துக் கொண்டு சிட்டிகை அளவு தேனில் குழைத்து சாப்பிட இரண்டு மூன்று வேலையில் இருமல் மறையும்.
ஆடாதொடை
நுரையீரல் மூச்சுக்குழலில் ஒட்டிக்கொண்டு வர மறுக்கும் சளியை இளக்கி (Mucolysis) வெளியேற்றும் ஆடாதொடை , சளி இருமலுக்கு சிறந்த மருந்து. இதில் உள்ள 'Bromhexine' சத்து, சளியை இளக்குகிறது. கரகரக்கும் தொண்டையால் குரல் மழுங்கும் நோயிலும் ஆடாதொடை மிளகு கசாயம் பலன் அளிக்கும். ஆடாதொடை உள் மருந்து.
Pls comment, how is it useful or not?
ReplyDelete